Thursday, June 4, 2015

Avvaiyar's view about Friendship!



This post is of Avvaiyar's 'Time honoured wisdom' (Moothurai ) . She uses simple comprehensible simile's and metaphors to explain moral principles This brilliant verse by Avvaiyar  sums up how a true relative & friend should be!
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு. 





Birds leave the pond when it is dry
Likewise the dishonest abandon you in poverty
But like the deep rooted water lily plants in pond
steadfast people will provide you support


A water birds, fishes leaves a pond when it dries up. Likewise, relatives/friends leave in times of poverty and they are not true relatives or true friends. True relatives are those who stay without leaving even in bad times similar to the flowersLily & Lotus (kotti, lilies, neithal) that stay in the pond even when it dries up.
These verses says that all men are friends in good times. that when a man loses his wealth, his friends and relatives avoid him and even his sons desert him. that when a man loses his wealth. His good qualities are not appreciated.  But, regarding her as a true friend who helps you when times are bad. Choice of a friend can be based on the trait of timely help and support. "A Friend In Need Is A Friend Indeed."

அது ஓர் அழகிய குளம்,அதில் நீரருந்த நிறைய பறவைகள் அங்கே நிறைந்திருக்கின்றன. அக்குளத்தில் அழகிய தாமரைச்செடிகளும், அல்லிச்செடிகளும் மலர்கள் பூத்து நிறைந்திருக்கின்றன.மழைக்காலம் தீர்ந்து, கோடை வெயிலில் அக்குளம் வற்றிப்போகிறது, அதுவரை அக்குளத்தை நாடி நலம்பெற்ற பறவைகள் இதற்கு மேலும் அக்குளத்தால் தமக்கு நன்மைகள் ஏதுமில்லை என்பதை உணர்ந்து கொஞ்சமும் நன்றியின்றி அங்கிருந்து பிரிந்து சென்றுவிடுகின்றன. ஆனால் தாமரையும், அல்லியும் அக்குளத்திலேயே தமது இறுதிக்காலம் வரை பிரியாது உடனிருக்கின்றன‌. நேசத்தை நட்பை  வறட்சி மாற்றவில்லையே! இந்த அழகான உவமையைக் கூறி உண்மை நட்புக்கும் சுயநலம் மிகுந்த போலி நட்புக்குமான வித்தியாசத்தை அழகுற விளக்குகிறார் ஒளவை. உண்மையான நண்பர்கள் எந்த சமயத்திலும் நம்மை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டார்கள், சொந்த தேவைகளுக்காக சுயநலமாக நம்மை விட்டு பிரிந்து செல்பவர்கள் உண்மை நண்பர்களாகவும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே நன்று.‌

No comments: