தீபாவளி வந்தது....
பூவனம் போல பூவாணம்
சங்கு சக்கரங்கள்
பூமியில் நட்சத்ரன்களாக
துள்ளிச் சிரிக்கின்ற
மத்தாப்புக் கம்பிகளில்
பாம்பு மாத்திரையின் மாயவித்தையில்
கண்களில் மத்தாப்பு!
பொட்டு வெடி,யானை வெடி
ஓலை வெடி ,
சர வெடிஎன
கண்ணுக்கு அழகாய் இருக்கும்
ஆயிரம் பட்டாசுகளின்
வான வேடிக்கையில்
கம்பி மத்தாப்பு சிரி சிரிக்க!
தீபாவளி வந்தது.
மனசுக்குள் மத்தாப்பு!